என் தமிழ் ஆர்வங்களுக்கும் ரசனைகளுக்கும் வித்திட்ட என் தந்தை தமிழாசிரியர் திரு இல.க.சுபாஸ் சந்திர போஸ் அவர்களுக்கும் என் திறமைகளை வளர்க்க உதவிய என் அம்மா திருமதி ரமணி அவர்களுக்கும் இந்த வலைப்பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.
நீண்ட நாட்களாக இனிய தமிழில் எழுதிவரும் திரு செல்வேந்திரன், திரு நர்ஸிம், திரு லேகா, திரு கேபிள் ஷங்கர், அக்கினிப்பார்வை, திரு யுவகிரிஷ்ணா, திரு அனிதா மற்றும் பல இனிய வலைப்பதிவர்களுக்கும் எனது நன்றியை சமர்ப்பித்து எனது முதல்பதிவை தொடங்குகிறேன்.
தொடங்கும் முன் அனிதா மற்றும் HVL அவர்களின் வலைப்பதிவு குறித்த பதிவுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
http://idhazhgal.blogspot.com/2010/05/blog-post.html
"ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..
இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது."
-அனிதா
HVL -ன் பதிவுக்கு இங்கே செல்லவும்.......
http://rithikadarshini.blogspot.com/2010/04/blog-post_28.html
ஒன்பதாம் வகுப்பு.....
என் அனுபவங்களை ரசிக்க கற்றுகொடுத்த வயது..........
தமிழ் ... இலக்கிய மன்றம் ....போட்டிகள்... நண்பர்கள் .....ஆங்கில வகுப்பு அழகிய தோழிகள்...வித்தியாசமான ஆசிரியர்கள்.... கணித ஆசிரியர் திரு காளீசுவரன்.....ஹிந்தி டியூஷன் மிஸ் திருமதி சீதா..... தேரோட்டம் ..பூ திருவிழா.. எங்கள் தெரு தோழிகள்.....
பள்ளி தோழிகளை முன்னிறுத்தி நடந்த அடிதடிகள் ........பயிற்சி ஆசிரியைகள்........அப்பப்பா சொல்லிக்கொண்டே போகலாம்........
இந்த நிகழ்வுகளையும் மற்றும் எனது எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன்.
தமிழிலில் தட்டச்சு செய்ய எளிய வழி முறைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போது பின்பற்றும் முறை கடினமாக உள்ளது.
எனது பதின் வயதில் எழுதிய..... நான் கவிதைகள் என்று நம்பிக்கொண்டிருந்த சில வரிகளை சில பதிவுகளாக வெளியிடுகிறேன்.....ஒரு நகைச்சுவைக்காக.....
இப்போது ஏதும் எழுதுவதில்லை.....தமிழ் உலகம் தப்பித்தது.
செல்வெந்திரன் நர்ஸிம் ஆகியோரது நடை மயக்கும் படியாக உள்ளது...உங்கள் கை பிடித்து நடக்க முயற்சிக்கிறேன்.....உதவுங்கள்............
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு சில வரிகள்...........
தலைப்பின்றி ஓர் கவிதை.........
தலைப்புகள் வைத்து எழுத தொடங்கினால்
ஒன்றுமே எழுதமுடிவதில்லை
தலைப்பை தவிர........
பலர் புகழுமாறு பத்திரிக்கைகளில் எழுத வேண்டும்
என் பல நாள் எண்ணமிது
வாழ்க்கை பயனுற எழுது....பாடம் படித்தது அறிவு
எனக்கென்ன லாபம்
கணக்கு பார்க்கிறது வணிக மனசு
எதைத்தான் எழுதுவது......
விட்டத்தை வெறித்த படி யோசனையில் மூழ்கிபோனேன்...
சடசடக்கும் வெள்ளைத் தாள்.....
ஏதும் எழுதாமல் இருப்பதுவும் நல்லது தான்
வெள்ளை தாளின் வெறுமை சொல்லிவிடுகிறது
வாழ்க்கைக்கான எல்லாவற்றையும்......
******************************************************************
16 கருத்துகள்:
நன்றி கபிலன்.
//வெள்ளை தாளின் வெறுமை சொல்லிவிடுகிறது
வாழ்க்கைக்கான எல்லாவற்றையும்......//
சிந்திக்க வைக்கிறது .
//தலைப்புகள் வைத்து எழுத தொடங்கினால்
ஒன்றுமே எழுதமுடிவதில்லை
தலைப்பை தவிர........//
100% உண்மை!
வாழ்த்துகள்!
அன்பின் கபிலன், மூளையால் எழுதப்பட்டவற்றை விட இதயத்தால் எழுதப்பட்ட எழுத்துக்களே அதிகம் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. அறத்தை மட்டும் கடவுளெனக் கொண்டு எழுதுங்கள். எழுத்தைப் போல் உயர்ந்த நாற்காலிகளில் உட்கார வைப்பது வேறெதுவும் இல்லை. வாழ்த்துகிறேன்!
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் ப்ளாக் எழுதுரார்னு பெருமையா சொல்லிக்கலாம்.வாரத்துக்கு ஒன்னாவது எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
கந்தசாமி
என் முதல் பதிவின் முதல் பின்னூட்டம் உங்களுடையது .
நன்றி HVL.
-கபிலன்
அன்பு நிறை செல்வா,
ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
அறம் போற்றுவேன்.
அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள்.
அன்பு கந்தசாமி,
நன்றி நன்றி நன்றி
அன்புள்ள அரசு
சிறப்பான உன் முதல் முயற்சி வெற்றி பெற வாழ்த்தும் அன்புச்சகோதரன்
திருநாவுக்கரசு.............
வாழ்த்துகள் கபிலன்.
எழுதுங்கள். வலையுலகை ஒரு பயிற்சிக் களமாய் கையாளுங்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கே இது அச்சுக்கு ஏற்ற படைப்பு என்று தோன்றும். அப்படிப்பட்ட படைப்புகளை அச்சுக்கு அனுப்புங்கள்.
தன்னடக்கம் இருக்கட்டும் அதற்காக தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.
மீண்டும் வாழ்த்துகள்!
அன்பு திருநா,
என் நினைவில் நிற்பவற்றில் பெரும்பங்கு உன்னுடையது.
இனிய சகோதரனுக்கு தம்பியின் நன்றிகள்.
தொடர்ந்து வாசி.
அன்பின் பரிசல்,
என் பதிவுலக ரசனைகளின் முதல் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
உடனடியான உங்கள் பதிலுக்கு கோடி நன்றிகள்.
அவ்வப்போது வாருங்கள்.
உங்க தமிழ்நடை நல்லாதான் இருக்கு தொடருங்க...
கவிதையும் நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.
கவிஞர் கருணாகரசு வருக வருக.
தங்களின் "வேர்களைத்தேடி" கவிதைகள் கண்டேன்.
ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
Valaiyulagam varaverkirathu athan suththam,asuththam anaiththudanum!
"uyarntha naarkaaliyil irunthu kuppura thalluvathum ezhuthe!@selvendiran:-)
அன்பின் வவ்வால் (என்ன ஒரு புனைப்பெயர்? :-D )
தங்கள் வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி.
நேர்முகமாகவே சிந்திக்கிறேன்.
Arasu, Sorry that i could not convey myself in Tamil here. Welcome to Blog. I have been a great fan of your Tamil for long time. My hearty congratualtions. Do write more..... http://vivekapithan.wordpress.com/ is our junior's blog....
Wish you all success!!!!
அன்பின் கபிலன்
வருக ! வருக ! வலயுலகத்திற்கு வருக ! முதல் பதிவும் முதல் கவிதையும் நன்று
நல்வாழ்த்துகள் கபிலன்
நட்புடன் சீனா
கருத்துரையிடுக
பேசுனா....பேர் எழுதுவேன்.....