புதன், 30 ஜூன், 2010

55 - வார்த்தை கதைகள்.......

HVL,  தன் பக்கத்தில் சுஜாதாவின் 55 - வார்த்தை கதைகள் பற்றிய ஒரு அறிமுகத்தை தந்து, தினம் ஒரு கதை என ஆவர்த்தனம் நடத்துகிறார்.

சரி நாமும் முயற்சிப்போமே என்று எழுதினால் 55 ...100 ஆகி கடைசியில் தொடரும் போடவேண்டிய நிலைமை ஆகிவிட்டது. மனம் தளராமல் கஜினி போல் படைஎடுத்ததில் மானேஜரிடம் ஒரு திட்டும் ஒரு சிலதும் தேறியது.

கதையை விடவும் அதன் வார்த்தைகளை எண்ணுவதற்கே அதிக நேரம் செலவானது. "சொல்லிக்கொண்டே" இதை போன்றவற்றை பதம் பிரித்து எண்ணுவதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு படுத்தி எடுத்தது. ஏறக்குறைய 55 க்குள் முடித்துவிட்டேன். இன்னும் திருத்தினால் விதிக்குள் அடங்கும்.

கீழே காண்பவை கொஞ்சம் சோதனை முயற்சிகள்.

கெட்.....செட்....கோஓஓ......


வேளை..நல்ல வேளை.....

"55 வார்த்தைகளில் கதையா? சான்சே இல்லை"

"சவால்-நாளை ஒண்ணு எழுதுறேன்"

"எப்படி?"

" சஸ்பென்சா ஒரு முடிவை மட்டும் யோசித்துவிட்டு அதற்கு முன்னால் சில நிமிடம் நடந்த நிகழ்வுகளை சொன்னால் ஒரு 55 -வார்த்தை கதை ரெடி....

இந்த மேனேஜர் இம்சைய குடுக்குறான். நேரமே கிடைக்க மாட்டேங்குது.இல்லன்னா நிறைய எழுதுவேன்"

"தெய்வமே....காலைக் காட்டு..."

"இதுக்கெல்லாம் காலை பிடிச்சுக்கிட்டு..."

என்னங்க...என்னங்க....

எந்திரிங்க......அலாரம் அடிச்சு 55 நிமிஷம் ஆச்சு.

உங்க மேனேஜர் போன் பண்ணார்........
 
      +++
 
 
............ஹல்ல்லோ.....அம்புட்டுதான் கதையே.........அடுத்த அஸ்திரம்........
 
 
கிறுக்கு.....
 
"ஏங்க உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?"
 
"இல்லையே ஏன்?"

"இது என்ன பேப்பர்? 55 நாள், 55 நிமிஷம், 55 ரூபா பாக்கி...அப்படின்னு?"

"அதை தூக்கி குப்பையில் போடு"

"தெரியாமத்தான் கேக்குறேன்...... 55 வார்த்தையில் கதை எழுத முடியலன்னா விட்ருங்களேன்.இப்படி 55 ...... 55 ன்னு கிறுக்கிட்டே இருந்தா எப்படி?. இந்தவாரம் உங்களை கவுன்சிலிங் கூட்டிட்டு போகணும்."

தீபா ஒரு நொடி அதிர்ச்சியாகி.....தனக்குள் கேட்டாள்....

"நான் நல்லா தானே இருக்கேன்?.....ஏன் இப்படி எழுதிக்கிட்டு இருக்கேன்?"

     +++

...................எஸ்கே............ப்ப்ப்பப்ப்ப்ப்........................
.

13 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

நல்ல எழுதி இருக்கீங்க.. கை குடுங்க ..

கபிலன் சொன்னது…

நன்றி உலவு.

வாங்க...கே ஆர் பி செந்தில்...
சும்மா காமெடி பண்ணாதீங்க..
நன்றி. தங்கள் வருகைக்கு.

அண்ணாமலை..!! சொன்னது…

அடுத்த முறை இதைவிட சிறப்பாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்!
நல்ல முயற்சி கபிலன்!
(கபிலன்!)
சிறப்பான பெயர்!

அண்ணாமலை..!! சொன்னது…

உங்களது வரவேற்புக் கவிதைகள்
மிக அருமையாக உள்ளன.

Kousalya Raj சொன்னது…

ஒன்னும் புரியல :) ஆனா படிக்க நல்லா இருக்கு. தொடருங்கள்

HVL சொன்னது…

//
சஸ்பென்சா ஒரு முடிவை மட்டும் யோசித்துவிட்டு அதற்கு முன்னால் சில நிமிடம் நடந்த நிகழ்வுகளை சொன்னால் ஒரு 55 -வார்த்தை கதை ரெடி....
//
பரவாயில்லையே.... நல்லா யோசிக்கிறீங்க!

ரெண்டாவது கதை பிடிச்சிருக்கு.

ஜெய் சொன்னது…

சூப்பர்... கதை எழுதற கான்செப்டை வச்சே கதை எழுதிட்டீங்க...

கபிலன் சொன்னது…

ஆஹா.....நம்மோட பக்கமா.......
வாங்க வாங்க...அல்லாரும்....வாங்க.....

மிக்க நன்றி அண்ணாமலை.
வரவேற்பு கவிதையின் நோக்கம் நிறைவேறியது. உங்களை வரவேற்று.

அன்பின் கௌசல்யா....
எனக்கும்தான்....ஒன்னும் புரியல....
வருகைக்கு நன்றி.....

அன்பின் HVL வருக வருக.
நன்றி....நீங்கள் தான் யோசிக்க வைத்தீர்கள்.

அன்பின் ஜெய்....
நன்றி. வருகைக்கும் ஊக்கத்திற்கும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கலக்கல்

பின்னோக்கி சொன்னது…

55 வைத்து, அதைப் பற்றியே ஒரு கதை. அருமை.

உங்கள் ப்ளாக்கின் முகப்பு புகைப்படம், மனதை வருடுகிறது. அழகான தேர்வு.

சௌந்தர் சொன்னது…

முதல் யாருப்பா நீ கேக்க வந்தேன் அப்புறம் வயசை பார்த்து இப்படி மாத்திட்டேன் யாருங்க நீங்க

கபிலன் சொன்னது…

அன்புடன் கபிலன்

அன்பின் பட்டா....பின்னோக்கி....சௌந்தர்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

சௌந்தர்...இதுக்கு என்ன சொல்றது....
சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் ஊட்டி
சரி சரி....உங்களைபோல் ஒருவன்...

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....