வெள்ளி, 2 ஜூலை, 2010

55 வார்த்தை கதைகள் - இன்னும் சில......

போன பதிவில் எழுதிய கதைகளே தேவலாம் என்ற எண்ணம், இவைகளை படிக்கும் போது உங்களுக்கு தோன்றினால், கையக்குடுங்க....எனக்கும் அதே....அதே....

பின்னூட்டமிட்ட அந்த ஆறு பேருக்கு நன்றி.

போலாமா.........ரை......ரை........


சகுனம்.......


அலுவலகத்தில் அவனால் இயல்பாய் இருக்கமுடியவில்லை.

இன்றைக்கு உணவு இடைவேளையில் எப்படியும் ஆஷாவிடம் சொல்லிவிடவேண்டும் என்று முடிவு செய்தான்.

என்ன சொல்வாளோ என்ற பதட்டம் மணி ஒன்றை தொட்டதும் இன்னும் எகிறியது. சுற்றும் முற்றும் பார்த்து ஆஷாவின் அறைக்குள் நுழைந்தான்.

செர்ரிகளை கடித்தவாறே புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள்.

சொல்லுங்க மகிழ்" என்றவளுக்கு பதிலேதும் சொல்லாமல் வந்த வேகத்தில் வெளியேறினான்.

கண்களை உருட்டி, உதடை சுழித்து மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் ஆஷா.

"ஹௌ டு சே நோ....."

                      +++


தனியே தன்னந்தனியே...


"உங்க வொய்ப் இப்போ வந்தா அவ்வளவுதான்"

"அவளுக்கு என்னை பத்தி தெரியும்"

"என்ன சொல்வீங்க?"

"என்னமோ சொல்வேன்?..நீ எதுக்கு வந்த அத சொல்லு?"

"டிங் டாங்.."

"உங்க வொய்ப் தான்......போயி கதவை திறங்க."

உள்ளே நுழைந்த வித்யா ஒரு வினாடி அந்த காட்சியை பார்த்தாள்.

எதுவும் பேசாமல் அதை தேடினாள்.

சமயலறையில் இருந்தது.

எடுத்து...

டிவியை நிறுத்தினாள்.

                                  +++

யாரது...


"இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே?

முயற்சி செய்தும் யூகிக்க முடியாமல் எரிச்சலானாள் நந்தினி.

மீண்டும் சட்டென திரும்பினாள்.
அவரைக் காணவில்லை.

அந்த யோசனை அவளை அலைக்கழித்தது.

சட்டென பொறி தட்டியது..."

போகலாமா என்றவனை நிமிர்ந்து பார்த்து
பிளீஸ்...இன்னும் ஒரே ஒரு பக்கம் என்றாள் என் மனைவி.

                           +++


அந்த நொடி.....

சுந்தருக்கு வியர்த்துக் கொட்டியது.

மனதுக்குள் தைரியத்தை வரவழைத்து வரட்டும் பார்க்கலாம் என்றான்.

ஆக்ரோஷமாக வந்தது அது.

கடைசி நொடி....

கண்களை அகல விரித்து
முழு பலத்தையும் பிரயோகித்தான்.

நடந்ததை உணர முடியாமல் தரையில் விழுந்தான்.

சிலபேர் ஓடிவந்து அவனைத் தூக்கிச் சென்றார்கள்.

கடைசி பந்தில் சதமடித்தான்.
அணியும் வென்றது.

கபிலனும் மகிழ்ந்தான்.
கதையும் முடிந்தது.

               +++

கொலை வெறியுடன் என்னை அடிப்பதற்கு கை ஓங்கினால்......

உங்களுக்கு இங்கே ஒரு சுகம் காத்திருக்கு.

            +++

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

இரண்டாவது கதையான டிவி பெட்டியை தவிர மற்றவை அனைத்தும் கதை படிப்பதாக இருக்கிறது.. ஒவொன்றையும் வித்தியாசப் படுத்துங்கள்.. அப்புறம் இவற்றை குமுதத்துக்கு அனுப்புங்கள் கண்டிப்பாக போடுவார்கள்..

கபிலன் சொன்னது…

கோடி நன்றிகள் செந்தில்....
அம்புட்டுதான் எனக்கு மண்டைக்குள்ள......
ஒரு சேமிப்பா இருக்கட்டுமேன்னு பதிவினேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கலக்கல்

கபிலன் சொன்னது…

நன்றி பட்டா...
நானும் உங்கள் நாடாவை பிடித்து.......
பின் தொடருகிறேன்...

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....