இங்கேருந்து கிளம்பி.... இப்டிக்கா வந்து... இங்கே நிக்கிறேனுங்க....
இருக்கை விட்டு எழுந்து... கொஞ்சம் நடந்தேன்... ஒரு காபி குடித்தால் தேவலாம் என்று முடிவு செய்து... அங்கிருந்த BRU நிலையத்தின் பெண்ணிடம் கேட்டேன்... மேலும் கீழும் பார்த்து...நாப்பது ரூபா..என்றார். ஒரு கணம் திகைத்து... பரவால்ல.. பையிலிருக்கும் முன்னூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு சில மணிகளில் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை... இதுக்காவது பயன்படட்டுமே...என்று..அந்த தங்க பஸ்பம் கலந்த காபியை பயபக்தியுடன் வாங்கினேன்.
எதிரே ரோஹினியும் அவர் பையனும்....ரோகினி இன்னும் செல்போனியபடி இருக்க... அந்த அமுல் பையன்..தீவிரமாக வீடியோ கேமில் எதையோ விரட்டிகொண்டிருந்தான்...
சிறு நடைக்கு பிறகு அந்த ஒரு அருமையான காட்சி..கண்ணில் பட்டது...நிச்சயம் என் பார்வையில் தான் கோளாறு என்று நினைக்கிறேன்... நமக்கு தான் எதையுமே நேரடியாக யோசிக்க தெரியாதே....
ஒரு பையன் ...ஒரு பொண்ணு....இருவரின் செல்போனும் பொதுவான சார்ஜரில் லைவாக இருக்க..எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து அவரவரின் எவரிடமோ வார்த்தைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்... காதுக்கும் வாய்க்கும் தானே வேலை...கண்கள் வெட்டியாய்தானே இருக்கிறது நினைத்தார்களோ என்னவோ..... இவர்கள் இருவரும் கண்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாக ஒரு நால்வரின் விளையாட்டை கடந்தேன்...
பாடகி கல்பனா...இரு காதுகளையும் இசை கொண்டு மூடி... கண்களால்... ஒரு புத்தகத்தை அளந்துகொண்டிருந்தார்.... அப்படியே பின்வாங்கி...வேறு வழியின்றி...நானும் எஸ்.ராவின் தேசாந்திரியை மூன்றாவது முறையாய் ஆரம்பித்தேன்.
பின்னர் நடந்தவை...ஒன்றும் நினைவில் இல்லை....மணி நாலை தொட்டது...ஐக்கிய அரபின் ஆஸ்தான எமிரேட்ஸில் வரிசையில் போய் இருக்கை தேடி அமர்ந்தேன்... கண்ணை சொருகினாலும் மறக்காமல் அவப்போது செயற்கையான பரிவுடன் நீட்டப்படும் அனைத்து பதார்த்தங்களையும் வயிற்றில் அடைத்தேன். என்னை கலந்தாலோசிக்காமல்.. ஆசியன் வெஜ்...என்று புக் செய்த அந்த முகமறியா நண்பரை... அந்த நேரத்திலும் நான் திட்ட மறக்கவில்லை. விமானமே... ஆடுகளையும்... முட்டைகளையும்... அடித்து ஆடிகொண்டிருக்க.... நம் ரத்தவெறி தெரியாமல்... சிறப்பு உணவு என்று எனக்கு மட்டும் நீட்டப்பட்ட உருளைகிழங்குடன் அழுது.... எனக்கு மட்டும் ஏனிப்படி நடக்குது...இட்ஸ் ஓகே என்று என்னை நானே தேற்றி..
சில படங்கள் பார்த்தேன்...அரபிக் பாப் கேட்டேன்..இருக்கைக்கு மேல் இருக்கும் விளக்கை அணைக்க பலவாறாக முயன்று... கடைசியில்... எதேச்சையாக.. ரிமோட்டில் எதையோ அமுத்த... பட்டென அணைந்தது... இதல்லாம் சகஜம் தான்...என்பது...பக்கத்து சீட்டில் ரிமோட் வயருடன் போராடி கொண்டிருந்தவரை பார்த்ததும் உண்டானது. முன்னொரு விமான பயணத்தில் சீட் பெல்ட்டுடன் போராடியதற்கு இது பரவாயில்லை என்று நினைத்தவாறே உறங்கிப்போனேன்.
காலை வெளிச்சத்தில் பாலைகளை ரசித்தபடியும் தக்கனூண்டாய் தெரியும் கட்டடங்களை விழி விரிய பார்த்தும் ஏழுமணி சுமாருக்கு துபையில் இறங்கி... உஸ் அப்பா அங்கும் ஒரு பாதுகாப்பு சோதனை.... டவுசரை தவிர... அதை கழட்டு... இதை கழட்டு என்று... ஷுவிலிருந்து கை காப்பு வரை கழட்ட வைத்து... லேசாக படுத்தினார்கள்.... எல்லாம் நம் பாதுகாப்புக்குத்தானே என நினைக்க கொஞ்சம் சந்தோஷமாகவே ஒத்துழைத்தேன்.. இல்லாவிட்டால்... ஒத்துழைக்க வைக்கபடுவேன்... இந்த தீவிரவாத பசங்களை நினைக்க கொஞ்சம் ஆச்சரிய மாகத்தான் இருந்தது... இந்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி... எப்படித்தான் ஊர் ஊரா போயி குண்டு வைக்கிரானுகளோ...அப்படி ஒரு கொலைக் கொள்கை வெறி...
இந்தாங்க உங்க பெல்ட்...மறந்துட்டீங்க...என்று பெருந்தன்மையுடன் முன்னால் போகும் பெண்ணுக்கு எடுத்து கொடுத்தேன்..நான் மறக்கலை...இருந்தாலும் நன்றி என்றார்....அட...மீண்டும் கல்பனா. நியூயார்க்கா போறீங்க என்றேன்... சான்பிரான்சிஸ்கோ என்றார்... அப்படியா... என்ன கோவோ அது என நினைத்தவாறே... ஹாப்பி ஜேனி என்றேன்... புன்னகைத்து விடை பெற்றார்.
தலையை சற்று லேசாக தூக்கியவாறே துபாய் விமான நிலையத்தை முன் பின்னாக இரண்டுமுறை அளந்து...ஒருவழியாக...அடுத்த விமானம் புறப்படும் இடத்தை அடைந்தேன்.
ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பின் அடுத்த பறவைக்குள் நுழைந்தேன்.....
(இன்னும் பேசுவோம்......) ___/\___
8 கருத்துகள்:
நண்பரே ... அழகான எழுத்து நடை ..... தொடருங்கள்
//கலந்தாலோசிக்காமல்.... ஆசியன் வெஜ்...என்று புக் செய்த அந்த முகமறியா நண்பரை... அந்த நேரத்திலும் நான் திட்ட மறக்கவில்லை. விமானமே...ஆடுகளையும்...முட்டைகளையும்...அடித்து ஆடிகொண்டிருக்க.... நம் ரத்தவெறி தெரியாமல்...சிறப்பு உணவு என்று எனக்கு மட்டும் நீட்டப்பட்ட உருளைகிழங்குடன் அழுது....இட்ஸ் ஓகே என்று என்னை நானே தேற்றி..//
அந்த நண்பர் எப்பங்க உங்க கைல கிடைப்பார் ? அந்த பதிவை எதிர்பார்கிறேன்.
அமரிக்க பயணம், கல்பனாவுடன் துவங்கும்போதே நிறைய திருப்பங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.. நல்ல எழுத்து நடை..
//
அட...மீண்டும் கல்பனா. நியூயார்க்கா போறீங்க என்றேன்//
அப்பாடா கடைசில பேசிட்டீங்க. நல்லா எழுதியிருக்கீங்க!
சுடச் சுட..கமெண்ட்டு -ங்குறது இதுதானா கார்த்திக்...
நான் எழுதி...டிராப்ட் பட்டன அமுக்காம போஸ்ட் பட்டன அமுக்கினேன்...
திரும்ப வந்து எடிட் செய்யலாம்னு பாத்தா உங்க கமென்ட்...மிக்க நன்றி கார்த்திக்....
அன்பின் செந்தில் சார்...நான்தான் அங்கே இங்க திரும்பினேன்...
வேறு எந்த திருப்பமும் இல்லை.. நன்றி சார்...
அன்பின் HVL ....ஆஹா...கல்பனாவை பத்தி நிறைய எழுதிட்டேனோ...
மிக்க நன்றி.. வருகைக்கும் ஊக்கத்திற்கும்...
அன்புடன் கபிலன்...
அண்ணா... உங்களுடைய பதிவு நீங்கள் நேரில் சொல்வது போல் உள்ளது....மேலும் தொடருங்கள்.. என்னுடைய வாழ்த்த்துகள்....என்றும் உஙகளை தொடரும் தம்பி ...என்னை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்..... அன்புடன்....முனீஸ்
"விமானமே... ஆடுகளையும்... முட்டைகளையும்... அடித்து ஆடிகொண்டிருக்க.... நம் ரத்தவெறி தெரியாமல்... சிறப்பு உணவு என்று எனக்கு மட்டும் நீட்டப்பட்ட உருளைகிழங்குடன் அழுது.... எனக்கு மட்டும் ஏனிப்படி நடக்குது...இட்ஸ் ஓகே என்று என்னை நானே தேற்றி.."
நீங்க விடக்கூடாது,எப்புடியாவது கோழிய புடிச்சுர வேணாமா? ,
நம்ம தங்க கம்பி வேற வந்துட்டான்.
@தம்பி ஒன்னஎல்லாம் மறக்க முடியுமாடா?
kandasamy.s
மிக்க நன்றி கந்தசாமி அண்ணா...
தம்பி எப்போதும் தங்க கம்பி தான்...தங்களை போன்ற அண்ணண்களுக்கு மட்டும்
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
கருத்துரையிடுக
பேசுனா....பேர் எழுதுவேன்.....