சனி, 3 ஜூலை, 2010

முதல் அமெரிக்கப் பயணம்.......

19-04-2010.....திங்கள்....

"உங்களுக்கு இன்னைக்கு ஒரு கிளையன்ட் இண்டர்வியு இருக்கு. ரெடியா இருங்க" என்று மேலாளர் சொன்னதும் ஒரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது.

அமெரிக்கா போணுமா....இந்த சாப்ட்வேர் பசங்கல்லாம் டீ சாப்பிட போறதுமாதிரி போய்ட்டு வருவான்களே அங்கயா?

போன முறை விசா எடுத்து பின்னால் ப்ராஜெக்ட் கான்சல் ஆனது மாதிரி ஏதும் நடக்குமோ? நம்ம ராசி அப்படி.

போன்றவாறு மனதுக்குள் நிறைய ஓடியது.

மாலை இண்டர்வியு.....சப்பையாக அது முடிந்ததும்.... இதுக்கா இவ்வளவு படம்.....என்றவாறு தாமதமாக குடும்பத்தை யோசித்தேன்.

வாண்டு இப்போதான் பள்ளிக்கூடம் போகுது. இன்னொரு வாண்டுக்கு 30 வயசாகுது..... சண்டை பிடித்து கட்டிக்கொள்ள ஒரு மூன்று மாதம் நானிருக்க மாட்டேன் என்றதுமே கிலியானார்கள்.

சின்னப்புள்ள தனமா ஒரு 28 லட்சம் லோன் போட்டு கட்டுற வீடு....நான் வளர்வதை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று நேற்று வைத்த சன்னலின் வழி சிரித்தது. வாழ்க்கையில் ஒரு முறை தான் நான். நானா அமெரிக்காவா? என்று அது கேட்பதை போல் தோன்றியது.

வாழ்க்கையை மாத சம்பளத்திடம் கொடுத்துவிட்ட பிறகு....எனக்கான முடிவுகள் பெரும்பாலும் என் கைகளில் இருப்பதில்லை. அது காட்டும் வழியில் ஓடுவதை தவிர வேறு வழியில்லை. நாய் மாதிரி வேலை வாங்கி சம்பளம் கூட கொடுக்காமல் அலைக்கழித்த முன்னாள் கம்பனிகளும், டிப் டாப்பாக அழகிய ஆங்கிலத்தின் வழி நம் சுயமரியாதையை சோதித்த முன்னாள் மேலாளர்களும் நினைவில் வந்தார்கள். அதுக்கு இது ஆயிரம் மடங்கு தேவலாம்.

வேற அல்டேர்நெட் எதுவும் முடியாதா? என்று மேலாளரிடம் கேட்டபோது.....என்னால் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்பதைப்போல் நம்பிக்கை ஊட்டி....ஆக வேண்டிய வேலையைப்பார் என்றார். டிக்கெட் சொல்லிரு...ஒரு நாள்ல பண்ணிருவாங்க...நாளைகழிச்சு ஏறிரலாம்..என்றவர் கடந்து போனதை கண்களை அகல விரித்து பார்க்க மட்டுமே முடிந்தது.

குடும்பத்தார் அனைவரையும் தேற்றி....அரைகுறையாக பாக்கிங் செய்து...குக்கர் எடுத்து வைக்கும்போது என் சுடுதண்ணி சமையல் நினைவுக்கு வந்தது. எல்லாம் தெரிஞ்சா ஏதும் நடக்குது...இதுவும் கடந்துபோகும் என நானே சமாதானம் செய்துகொண்டு .... ஆயத்தமானேன்.

நானும் உன்னோட ப்ளைட்ல அமெரிக்கா வருவேன் என்று மதியத்திலிருந்து காலை சுற்றிவந்த பிள்ளை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. கன்னத்தை லேசாக தட்டி ஒரு முத்தம் கொடுத்து வரட்டுமா என்றவனின் வார்த்தைகளை பொருட்படுத்தாது விமான நிலையத்தின் நள்ளிரவு வெளிச்சத்தை கண்கள் விரிய பார்த்து...... எங்கிருக்கிறோம் என தெரியாமல் முழித்தது.

பக்கத்தில் படபடவென நண்பர்களிடம் பொரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணை நாங்கள் அனைவருமே திரும்பிப்பார்த்தோம். எங்கயோ பார்த்திருக்கோமே என்றபடி அம்மா குழம்ப...பாடகி கல்பனா...என்றேன் என் இசை ஞானத்தின் வழி. நீங்க நல்லா பாடுறீங்க என்ற அம்மாவை பார்த்து சிநேகத்துடன் சிரித்தார் கல்பனா.

அப்பா, அம்மா, மனைவி, குழந்தை கை அசைக்க....அந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது.....

மீனம்பாக்கம் விமான நிலையம் தன் வழக்கமான பரபரப்புடன் என்னை உள்வாங்கியது.....


(இன்னும் பேசுவோம்......)

12 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

பா.ராஜாராம் சொன்னது…

intresting!..

தொடருங்க கபிலா..

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் நல்லா இருக்குங்க கபிலன்

கதை சொல்லியின் பயணக் குறிப்புகள்

M.Mani சொன்னது…

ம். பிறகு?.....

அமுதா கிருஷ்ணா சொன்னது…

தொடருங்கள்..

கபிலன் சொன்னது…

உலவு...
பா.ரா...
நேசன்....
மாணிக்கம்...

மிக்க நன்றி..வருகைக்கும்...ஊக்கத்திற்கும்..

Unknown சொன்னது…

"நாய் மாதிரி வேலை வாங்கி சம்பளம் கூட கொடுக்காமல் அலைக்கழித்த முன்னாள் கம்பனிகளும், டிப் டாப்பாக அழகிய ஆங்கிலத்தின் வழி நம் சுயமரியாதையை சோதித்த முன்னாள் மேலாளர்களும் நினைவில் வந்தார்கள்"

சேம் ப்ளேட்.கலக்குங்க

கபிலன் சொன்னது…

வாங்க அமுதா கிருஷ்ணா....
தொடர்ந்து வந்து படிக்கணும்....ஆமா சொல்லிப்புட்டேன்.

அன்பின் கந்தசாமி.....
சேம் பிளட்....அவனுக மட்டும் கைல கிடைசானுங்க....
ஒன்னும் செய்ய முடியாது...நல்லா இருக்கீங்களான்னு கேப்பேன்....

Karthick Chidambaram சொன்னது…

//இன்னொரு வாண்டுக்கு 30 வயசாகுது.....// Typo ?

Long termaa short termaa ?

கலக்குங்க.தொடருங்கள்..

கபிலன் சொன்னது…

அன்பின் கார்த்திக்....
என் மனைவியைத்தான் அப்படி சொன்னேன்.
இன்னும் பயிற்சி வேண்டுமோ...எனக்கு.
குறுகிய கால வருகைதான் நண்பரே...
அதுக்கே இத்தனை அலட்டலா என்று நீங்கள் கேட்பது....எனக்கு கேட்கிறது.

Unknown சொன்னது…

நீங்க கவலைப்படாதிங்க,நாம ஒரு நாலு பேரு போயி டெரரா மொறப்போம்,அப்பிடியும் அவனுகளுக்கு புரியாது,
ஒருத்தன் what he is telling nu ஆரம்பிப்பான்,அப்போ நாங்க மொறைக்க வந்துருக்கொம்னு சொல்லிருவோம்.
ஆனா மொறப்பு செம டெரரா இருக்கணும்.

கபிலன் சொன்னது…

அன்பின் கந்தசாமி.....
ஹ ஹ ஹா...

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....