ஞாயிறு, 24 ஜூலை, 2011

ட்விட்டர் சிற்றுரைகள்....

  • அடிக்கடி இமைப்பதில்லை குழந்தைகள். இமைக்காதிருத்தல் இறைவன் நிலை.

  • "அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம்" எத எதோட. கூட்டம் போடுறதை விட்டுட்டு நல்ல வக்கீலாப் பாருங்க

  • யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை,உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.ஆனாலும் கருணாநிதிக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி.

  • நாயை அடிப்பானேன்....___________ஐ சுமப்பானேன்... @ தி மு க 

  • செயற்குழு துளிகள்-ஸ்டாலின் வாசலில் கையெழுத்து போடாதது, பேனர்களில் அழகிரியின் படம் இல்லை. பேப்பரை விட்டுட்டு கல்யாண ஆல்பம் போடப்போங்கடா..

  • தனது விருப்பு வெறுப்புகளை செய்திகளாக நம்மேல் திணிக்கிறன நம் "தின" நாளிதழ்கள்.

  • நம் நாட்டில் எல்லாமே ஏதோர் (அல்லது சில) சக்திக்குட்பட்டு நடப்பதாக ஒரு ஐயம்.

  • சும்மாவாவது இருங்களேண்டா.நேரில் போய்ப் பார்த்து என்ன எழவைடா புடுங்கப்போறீங்க? # தமிழர் பகுதிகளை நேரில் பார்வையிட ஜெக்கு ராஜபக்ஷே அழைப்பு.

  • எனது இந்த நூறாவது ட்விட்டை நீண்டகாலமாய் வலையுலகத்தில் முத்திரை பதித்துவரும் அன்பு அண்ணன் பரிசலுக்கு காணிக்கை ஆக்குவதில் பேருவகை கொள்கிறேன்.

  • டிவிட்டரில் பாலோ பண்ணுவதற்கும் அனுமதி பெறவேண்டியிருக்கிறது சிலரிடம்.பெருசா பூட்டு தொங்குது. அனுபவம் ரொம்ப பலமாக இருக்குமோ??

  • ஒரு மாத ட்விட்டர் அனுபவத்தின் ஆய்வு அறிக்கை: பெண் டிவிட்டர்களின் பாலோ மற்றும் பாலோயர்சின் விகிதம் 1:10

  • எப்படியாவது அதன் அருகில் சென்று பார்த்துவிட தோன்றுகிறது.மனதை பெரும் பயம் கவுகிறது. நிச்சயம் முடியாது. அலமாரியில் அனாதையாய் சீரோ டிகிரி.

  • அவளை ஒரு கும்பல் துரத்துகிறது அவனை ஒரு கும்பல் துரத்துகிறது சண்டை பாட்டு சுபம்.பையா படம். கற்பனை வறட்சியின் உச்சம்.

  • இந்த உலகம் எளியவர்களுக்கானது என்பது எளியவர்களுக்கு மட்டும் புரிவதில்லை.

  • வலிந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவரை ஏளனம் செய்யும் உலகம், சிலரின் அறிமுகம் வேண்டி ஆலாய் பறக்கிறது.

  • ஆன்லைனில் இருப்போர் என்று லைவாக காட்டதவரை ட்விட்டருக்கு ஏறுமுகமே. ஒரு கணிப்பு.

  • நியூஜெர்சியின் இன்றைய வெயில் உச்சம். 38 டிகிரி. மண்டைய பிளக்கிறது.நம்மூர் எவ்வளவோ தேவலாம்.

  • படிக்கும் விழிகள்தேடி பரிதவித்தலையும் வார்த்தைகள் பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் ஒவ்வொன்றாய் உதிர்க்கிறது இவ்வாறாய் என் பேனா.

  • உங்கள் அளவுகோலுக்குள் அகப்படாத நிலையொன்றை தரிக்கும் நோக்கில் நெடுநாளாய் நான்.அளந்து பார்க்கத்துடிக்கும் தராசுகளுடன் நீங்கள். 
 

திங்கள், 23 மே, 2011

என்னவென்று சொல்வதம்மா.......

ஆறேழு மாதமாய் அரும்பாடுபட்டு

அமெரிக்கா வந்தவுடன்

அம்மா பல் வலிக்குதென்று

அலகு வீங்கி நிற்கிறான் மகன்

அழுத கண்ணாய் மனைவி

ஆற்றாமையுடன் நான்