புதன், 2 ஜூன், 2010

சங்கரலிங்கம்........





















அம்மாவுக்கென்று பெரிதாய் ஏதும்
சேர்த்துவைத்துவிட்டு போகவில்லை என
அப்பா கரித்துக் கொட்டுவார் உன்னை.
அண்ணனை திட்டும்போதெல்லாம்
உன்னை போலவே பிறந்திருக்கிறான் என்கிறார்கள்.
வேலையை எழுதிக் கொடுத்து
பென்சனுக்கு கூட வழிஇல்லாமல் செய்துவிட்டாயாம்
புலம்புவாள் பாட்டி.
உன் தலையணை அடியிலிருக்கும் சில்லறைகளை திருடி
சீனி மிட்டாய் தின்றபோது
நீ  ஏன் படுத்தே இருக்கிறாய் என யோசித்ததில்லை நான்.
அண்ணனுக்கு நீ சைக்கிள் ஒட்ட கற்றுதந்தபோது
எனக்கும் என நான் அழுததும்,
அவனுக்கும் எனக்குமான சண்டைகளை தவிர்க்க
இரண்டிரண்டாய் நீ வாங்கிவரும்
திண்பண்டங்களின் இனிப்பும் மங்கலாய் என்னுள்.
உன் பழய புகைபடம் போல.
நீ இறந்தபோது அழக்கூட இல்லை நான்.
ஊரார் மட்டும் இன்றும் என்னை
உன் பேரன் என்றே விசாரிக்கிறார்கள்.

என்னவோ செய்திருக்கிறாய்
எனதருமை தாத்தா நீ.

9 கருத்துகள்:

எல் கே சொன்னது…

nalal irukunga kabilan. todarnthu eluthungal

கபிலன் சொன்னது…

மிக்க நன்றி LK . தொடர்ந்து வாருங்கள்.

HVL சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு!

கபிலன் சொன்னது…

தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி HVL .

பாலா சொன்னது…

fine &superb

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ம்...
நல்லாருக்கு.

மதுரை சரவணன் சொன்னது…

சூப்பர். வாழ்த்த்துக்கள்

கபிலன் சொன்னது…

அன்பின் பாலா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங்களின் கடல் புறா கண்டேன். மகிழ்ச்சி.

அன்பின் குணசீலன்...
சங்க இலக்கியத்தில் தேர்ந்த புலமைமிகு தங்களின்
வருகை, என் வலைப்பக்கத்திற்கு பெருமை.
நன்றி. தங்கள் இலக்கிய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்பின் மதுரை சரவணன்,
கல்விக்காக இயங்கும் தங்களின் வலைத்தளம் கண்டேன்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

-அன்புடன் கபிலன்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கபிலன்

தாத்தாவை நினைவுறுத்தி ஒரு கவிதை. நன்று நன்று - அவரது பேரனா நீ என மற்றவர் விசாரிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி சொல்ல இயலாத மகிழ்ச்சி.

நன்று நன்று நல்வாழ்த்துகல் கபிலன்
நட்புடன்சீனா

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....